மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40-ம் கிராமம், வம்மியடியூற்று பாடசாலை வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான ரவி நளாயினி என்பவர் (28.02.2026) முதல் காணாமல் போயுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று காலை பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று மருந்து எடுத்தவர், பின்னர் அங்கிருந்து பழுகாமம் இலங்கை வங்கி ஏ.டி.எம் (ATM) இயந்திரத்தில் 5000 ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காலை 11.00 மணியளவில் வீடு திரும்புவதற்காக பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறிச் சென்றதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சமயத்தில் அவர் சாம்பல் நிறச் சேலை (Grey Saree) தங்க ஆபரணங்கள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகக் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்:-
இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகக் கீழே உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்:
0(ரஞ்சன்) 75 694 0655, 077 384 8385, 074 157 7381
