முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க இன்று (20) நிதிக் குற்றப் குலனாய்வுப் பிரிவில் ஆஜராகிறார்..
அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுவார் என்று கடந்த 18 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், அறிவித்தது.
அதற்கிணங்க அவர் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்க வருமாறு திருமதி மைத்திரி விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
