தோட்டத் தொழிற்துறையில் நாட்சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மலையக இளையோர் பலர் கொழும்பு ஹோட்டல் தொழிலைக் கைவிட்டுத் தோட்டங்களுக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பொரளை, மருதானை முதலான பகுதிகளில் இவ்வாறு இளையோர் வெளியேறுவதால் ஹோட்டல்களை நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (17) மாலை அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர், இலங்கையின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
