அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துகிறது!

அரச பொது நிர்வாகக் கட்டமைப்பை அரசாங்கம் பலவீனப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொழில்வாண்மை, திறமை, நேர்மை அற்றவர்களால் அரச நிர்வாகத்தைக் கொண்டுநடத்த முடியாது. ஆனால், அரசாங்கம் எந்தத் தகுதியும் இல்லாத அரசியல் கட்சி உறுப்பினர்களை அரச நிர்வாகத்தில் உள்வாங்குவதாகத் திருமதி சந்திரிகா விடுத்துள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச நிர்வாகம் குறித்து மக்களுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை இராஜினாமா செய்யும் அளவுக்கு மக்கள் எழுச்சி உருவானது என்றும் திருமதி சந்திரிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.