கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் கல்வி அமைச்சில் இன்று (09) நடைபெற்றது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி, உயர் கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோர் தலைமையில் புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் 25 மாவட்டங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 300 பேர் மாதாந்தம் 2600 (இலங்கை ரூபாய்) பெறுவார்கள்.





