நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்றை திவுலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
திவுலப்பிட்டி, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஆணின் வசம் 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணின் வசம் 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளில், இவர்கள் இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டி, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
