கட்டுப்பாட்டு விலைக்கு சம்பா விற்க முடியாது

கட்டுப்பாட்டு விலைக்கு சம்பா விற்க முடியாது என்றும் கீரிசம்பாவுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தால் சிக்கலாகும் என்றும் முன்னணி அரசி உற்பத்தியாளரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டரிசி கூடுதலாகப் பயிரிடப்பட்டுள்ளது. கீரி சம்பா மிகக் குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. அதனால்தான் கீரி சம்பாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் திரு. சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டால் நிலைமை சிக்கலாகும் என்றும் டட்லி சிறிசேன எச்சரித்துள்ளார்.