எவரெஸ்ட் பனிப்புயலில் 1000இற்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு

எவரெஸ்ட் பனிப்புயலால் சிக்கிய 1000இற்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எவரெஸ்ட் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

சீனாவில் தற்போது கோல்டன் வீக் எனப்படும் 8 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, மலையேற்றத்துக்கு இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

1,000க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் மலையேறி, முகாம் அமைத்து தங்கியுள்ளனர்.

இதன்போது எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள சீனாவின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் வீசியதால்  முகாமில் தங்கியிருந்த 1000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள்  சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 350பேர்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.