2025 உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்காக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீடு கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகவில், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் பிரதேச அமைப்பாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர் .
இந் நிகழ்வு நேற்று 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு குடும்பத்தினருக்கு உத்தியோக பூர்வமாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி மனையைப் பாவனைக்குக் கையளித்தார்.
இவ்வாறு கையளிக்க பட்ட மனை மஸ்கெலியா நகரில் உள்ள ஸ்ரீ சண்முக நாதர் ஆலய சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
