வடமாகாண கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராமலிங்ககம் சந்திரசேகர் ஈடுபட்டார்.
வட மாகாணம், யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க பிரதிநதிகளுடனான கலந்துரையாடலொன்று, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு கூட்டுறவு கட்டமைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது, இதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகள் சம்பந்தமாக அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்தார்.
கூட்டுறவு சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
