முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆசிவேண்டி இதொகா பூஜை வழிபாடுகளை இரத்தினபுரி ஆலயங்களில் நடத்தியது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் குணம் பெறுவதுடன் சகல பிரச்சினைகளில் இருந்தும் மீண்டெழுந்து நாட்டுக்கும் மக்களுக்கும் மீண்டும் சிறப்பான முறையில் சேவையாற்ற வேண்டும்.
எனப்பிரார்த்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று 25 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் , இரத்தினபுரி சிவன் கோவில் , இரத்தினபுரி புதிய நகர் பத்திர காளியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியது..
இதில் சமரகமுவ மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் யெஹியா எம். இப்ளார்,. கொடக்கவலை பிரதேச சபை உறுப்பினர் யோகநாதன். காவத்தை பிரதேச சபை உறுப்பினர் எஸ். சுரேஸ், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் எஸ்
சிவா சுரேந்திரன்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



எஸ். ஆர். இரவீந்திரன், இரத்தினபுரி
