சாமிமலை வெள்ளத்தில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு

சாமிமலை வெள்ளத்தில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக சாமிமலை கிறீன் லேன் பாம் பகுதியில் உள்ள சில குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

சாமிமலை மஸ்கெலிய பிரதான பாதையில் சிங்கள பாடசாலைக்குச் செல்லும் பிரதான பாதை வரை நீர் தேங்கி பாதை முற்றாக மூழ்கியதால் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாகனங்களைச் செலுத்த நேரிட்டதாக வாகன சாரதிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் பயிர்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பண்ணையாளர்கள் தமது பணியைச் செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சீரற்ற காலநிலை காரணமாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சாமிமலை செ. ஞானராஜ்