கொக்கட்டிச்சோலை விபத்தில் மூவர் படுகாயம்

கொக்கட்டிச்சோலை விபத்தில் மூவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மடடக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கொக்கட்டிச்சோலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித் தீவு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்து சாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர்

கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கொக்கொட்டி சோலை போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொக்கட்டிச்சோலை விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு வரதன்