அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி, சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் முதல் பாதியில், கரும்பு விவசாயிகள் அமைப்புகள், ஹிங்குராண, கல்லோயா தொழிற்சாலையின் மேலாண்மை அதிகாரசபை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், அம்பாறை கல்லோயா தொழிற்சாலைக்குக் கரும்பு பயிரிட்டு வழங்கும் கரும்பு விவசாயிகளின் நிலப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் கலந்துரையாடி உடன்பாடுகளை எட்டினார்.

பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் தற்போதுள்ள பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

எஸ். சினீஸ் கான்