சாமிமலையில் 14ஆவது அகவையில் இலங்கை வங்கி

சாமிமலையில் 14ஆவது அகவையில் இலங்கை வங்கி தடம் பதிக்கின்றது.

சாமிமலை பிரதேச மக்களின் நலன் கருதி கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி வாடிக்கையாளர் சேவையை ஆரம்பித்த சாமிமலை கிளை இலங்கை வங்கி பதினான்காவது அகவையில் நேற்று ஆகஸ்ட் முதலாம் திகதி தடம் பதித்தது.

சாமிமலை இலங்கை வங்கிக் கிளையில் அகவைதின நிகழ்ச்சி சம்பிரதாய பூர்வமாக மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வங்கி முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வங்கி உத்தியோகத்தர்கள், சாமிமலை நகர வர்த்தக பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை வாழ் மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வங்கி 86 வருடங்கள் தனது வாடிக்கையாளர் சேவையைச் சிறப்பாக செய்து வருகின்றது.

சாமிமலை ஞானராஜ்