ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

பொலிவுட் நடசத்திரம் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியாக் கொழும்புவில் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் கனவு நகரம் எனும் விடுதி திறப்பு விழா எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி நடைபெறுகிறது.

இதில் விசேட விருந்தினராக நடிகர் ஷா ருக் கான் கலந்துகொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஷாருக் கான் திட்டமிட்டபடி இலங்கை வரமாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமது தனிப்பட்ட காரணங்களுக்காகத் தம்மால் அன்றைய தினம் இலங்கை வர சாத்தியம் இல்லை என்று நடிகர் ஷா ருக் கான் அறிவித்திருப்பதாகத் தெரியவருகிறது.