மன்னாரில் ‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் அரங்கேற்றப்படுகிறது.
மன்னார், பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய சமூகம் ஏற்பாடு செய்திருக்கும் ‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம் நேற்று (25.09.2026) ஆரம்பமாகியது.
‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம் பேசாலை, புனித பத்திமா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறுகிறது.இன்று (26) இரவு 7 மணிக்கும் நாடகம் அரங்கேறும்.நாளை 27ஆம் திகதி ஞாயிறு காலை திருப்பலியுடன் மரபு நாடகம் நிறைவடையும்.
‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மேடையேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.



புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் அடிகளார் ‘புனித அருளானந்தர்’ மரபு நாடக நிகழ்விற்குத் தலைமை தாங்குகின்றார்.
மரபு நாடக ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக, மன்னார் மறைமாவட்ட ஆயர பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பா. கிறிஸ்து நேசரட்ணம் அடிகளாரும் மன்னார் மாவட்டச் செயலாளர்
க. கனகேஸ்வரனும் பங்கேற்றனர்.
குருசுப்புலவர் என அழைக்கப்படும் பேசாலையைச் சேர்ந்த அவுறான் செபஸ்தியான் குருஸ் என்பவரால்; ‘புனித அருளானந்தர்’ மரபு நாடகம், 1962ஆம் ஆண்டு எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பெர்னாண்டோ
