வத்தளை, மாபாகே பகுதியில் கணினி விற்பனையகம் ஒன்றில் இன்று (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மஹபாகே பகுதிக்கு அருகில் கொழும்பு நோக்கிச் செல்லும் பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
