இரத்மலானை சொய்சாபுரம் தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை, சொய்சாபுரம் தொடர்மனைக் குடியிருப்புத் தொகுதியின் ‘C’ பகுதியில் இன்று (23) இரவு எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் குடியிருப்பில் இருந்த மூவர் தீக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் அண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தகவலறிந்து உடனடியாகச் செயற்பட்ட மொரட்டுவை தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயுக் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
