கடற்படையின் டோரா படகு விபத்து

கடற்படையின் டோரா படகு விபத்துக்கு உள்ளானதில் 11பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இரத்மலானை அங்குலானை கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் அதிவேக டோரா படகு ஒன்று இன்று (15) விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர்கள் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடற்படையின் அறிவுறுத்தலின் பேரில், மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படையும் உதவி வழங்கியுள்ளது.

விபத்துக்குள்ளான படகை கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17,Bell 412 ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எஸ். ஆர். இரவீந்திரன்