மட்டக்களப்பில் வீட்டுத் திட்ட பயனாளிகள் 55 பேருக்குக் காசோலை

வீட்டுத் திட்ட பயனாளிகள் 55 பேருக்கு காசோலைகள் வழங்கும் வைபவம் மட்டக்களப்புவில் நேற்று (06) பிற்பகல் நடைபெற்றது.

சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை எனும் தேசிய வீட்டு வசதி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய வீடு அமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது

மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்ட பயனாளிகள் 55 பேருக்கு முதற்கட்ட காசோலை வழங்கப்படது.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுபாஸ்கரன் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டு திட்டத்திற்கான 1 லட்சம் ரூபாய் வீதம் காசோலைகளை வழங்கினார்.

மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் அருள்ராஜ் தேசிய வீடு அமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் பயனாளிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எஸ். வரதராஜன்

கதிர்காமம் புனித யாத்திரை என பிரகடனம் செய்யப்படும்