பொதுப்பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்ப்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

லிட்ரோ,லாஃப் நிறுவனங்கள் தமது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

12.5 கிலோகிராம் லிட்ரோ வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300-ஆல் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.4,465 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லாஃப் 12.5 கிலோகிராம் வீட்டு பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,280-ஆல் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ரூ.4,965 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.118-ஆல் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,792 ஆகும்.

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.55-ஆல் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.835 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.512-ஆல் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,988 ஆகும்.

வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர் புதிய விலைகள் இன்று (3) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக லாஃப்ஸ், லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எஸ். ஆர். இரவீந்திரன்

சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம்!