தித்துவா புயலினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு சிறிய நடுத்தர வியாபாரிகளுக்கான நிதியுதவிகள் வழங்கல்
தித்துவா புயலால் பாதிக்கப்பட்ட மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிறிய நடுத்தர வியாபாரிகள் வணிக நிலையங்கள்,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) பிற்பகல் மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சத்தியா நந்தினி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு, தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளு க்கு 2 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் இப்பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், அரச அதிகாரிகள், மட்டு மாநகர சபையின் உறுப்பினர்கள்,பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.வரதராஜன்









