நடிகை சுகன்யா தொடர்ந்த வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

நடிகை சுகன்யா தொடர்ந்த வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்தபோது, நடிகை சுகன்யாவுக்கும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறினார்.

இதனை அந்த நிறுவனம் நீக்காமல் அப்படியே ஒளிபரப்பு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுகன்யா, இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதுடன் சினிமா வாய்ப்புகளும் பறிபோனதாகக் குறிப்பிட்டு அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தனக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.