ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டுகிறார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியல் இருப்புக்காக மாவட்டத்தில் கொண்டு வந்து இடையின நடுவே கைவிடப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை எமது அரசாங்க காலத்தில் நாம் தற்போது வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எமது அரசாங்கத்துக்கு எதிரான தொடர்ச்சியான சில பிழையான கருத்துகளை எதிர்க்கட்சி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது என்றும் திரு. பிரபு கூறினார்.
நேற்று (08) மாலை மட்டக்களப்புவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறிய அவர்களே, இன்று அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதையும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.
இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படும். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க எமது அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களுக்கான நீதிக்கும் நேர்மைக்குமான அரசாங்கமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எஸ். வரதராஜன்
