முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனாவுக்கு இலஞச் ஊழல் குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் நாலாண்டு கடூழிய சிறைத்தண்டனையும் ஆறு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் குணவர்தனாவுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006 இல் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் வாகனக் கொள்வனவில் ஊழல் புரந்ததாக அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
