கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாமரச் செய்கையில் கத்தரித்தல், பயிற்றுவித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு நேற்று நண்பகல்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்
எஸ். பரமேஸ்வரன் தலைமையில் கும்பிலாமடு விவசாயக் கிராமத்தில் இடம்பெற்றது
இதில் மாமரச் செய்கையில் ஏற்படும் பூச்சித் தாக்கம், இலை கருகுதல் மாமரக் கன்றுகளை எவ்வாறு உரிய முறையில் நாட்டுதல், கத்தரித்தலுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துதல், அதன் விளைச்சலை எவ்வாறு அதிகரித்தல், பூக்கின்ற வீதத்தைக் கூட்டுதல், சூரிய ஒளியின் பயன்பாடு, உணவு தயாரித்தல், கிருமி நாசினி விசுறுதல் என்பன பற்றி இங்கு விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் திருமதி வி.காயத்திரி, சத்துருக்கொண்டான் விவசாய போதனா ஆசிரியர் எஸ்.ஞானப்பிரகாசம், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலர் ழ்வில் கலந்துகொண்டனர்.
எஸ். வரதராஜன்






