கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மொரகஸ்முல்லை, ராஜகிரி, நாவலை, ஒபேசேகரபுரம்,கொலன்னாவை ஆகிய நகரசபை நிர்வாகப் பிரதேசங்களுக்கு இன்று (05) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகிக்கும் பிரதான குழாய்க் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்க் கசிவு காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
