மட்டு-கல்முனை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்;போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (05)இடம்பெற்ற இந்த விபத்தினால் பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிக்க்பட்டது.

காத்தான்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து தாழங்குடா நோக்கிப் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன்,அதே திசையில் வந்த வாகனம் வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

விபத்து தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ். வரதராஜன் – மட்டக்களப்பு