ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 12, 17,18 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளான அனைவரும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
