பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கோரிக்கை

அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் (Family Planning Association of Sri Lanka) நிர்வாக இயக்குநர் Rusitha Perera இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தங்களது சங்கம் பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த வெற்றிகரமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச, தனியார் நிறுவனங்களிலும் இதுபோன்ற முன்னேற்றமான திட்டத்தை செயல்படுத்துவது பெண்களின் உடல்நலத்திற்கும் பணியிட செயல்திறனிற்கும் பெரிதும் உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முன்மொழிவின் மூலம் பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் அசௌகரியங்களைக் குறைத்து, அவர்களின் உரிமைகள்,மரியாதை பாதுகாக்கப்படும் சூழலை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எஸ். ஆர். இரவீந்திரன்