வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அவர்களில் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு இவ்வாறு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
