சுற்றுலாப் பயணிகள் 2380 பேருடன் சொகுசுக் கப்பல் கொழும்பு வருகை

சுற்றுலாப் பயணிகள் 2380 பேருடன் சொகுசுக் கப்பல் இன்று மே 21 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தக் கப்பல், கொழும்பு கிழக்கு முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் 951 மாலுமிகளும் வருகை தந்துள்ளனர்.