இலங்கையில் இன்று (மே 15) முதல் பேபல் பணப்பரிமாற்ற சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோல்பேஸ் ஹொட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்தச் சேவையை இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி ஆகியவற்றின் ஊடாகப் பெற முடியும்.
