இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை எனத் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (24) மாலை 5.41 மணிக்குத் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுனாமி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
