கிழக்கில் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுப்பு

அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும் அனர்த்த முன் ஆயத்த செயற்பாடுகள் முன்னெடுப்பு

அனர்த்த முகாமைத்து அமைச்சினால் EL NINO தாக்கத்தினால் பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங்களை இனம் கண்டு தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலைமையால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தை அடுத்து விசேட அனர்த்த முன் ஆயத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கில் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுப்பு

இதே வேளை, மட்டக்களப்பு மாவட்ட வட கீழ் பருவமழை திடீர் அனர்த்த முன்ஆயத்த கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அச்சமயத்தில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு கரையோர பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பு திடீர் மழை வீழ்ச்சி காற்று வெள்ளம் மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களின் நீர்மட்டத்தின் அளவு சுகாதாரத்தாரப்பினரின்,முப்படையினரின் முன்னாயத்த செயற்பாடுகள் இன பலதரப்பட்ட விடயங்கள் இங்குக் கலந்துரையாடப்பட்டன

கிழக்கில் அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுப்பு

மாவட்டத்தின் முப்படையின் உயர் அதிகாரிகள் வானிலை அவதான நிலையத்தின் மற்றும் நீர்ப்பாசத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சகல பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் பிரதேச சபைகளின் சுகாதாரத் தரப்பினர் உத்தியோகத்தர்கள் எனப் பலர் இந்த விசேட அனர்த்த முகாமைத்துவ கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்