வெல்லாவெளி பகுதியில் பாதுகாப்பற்ற மின்சாரத் தூண்கள் அகற்றம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவேட்குடா பிள்ளையார் வீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் வீதி விபத்துக்களுக்கு காரணமாகவும் காணப்பட்ட மின்சாரத் தூண்கள் இன்று (19) அகற்றப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் முயற்சியினால் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த மின் தூண்கள் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வெல்லாவெளி பகுதியில் பாதுகாப்பற்ற மின்சாரத் தூண்கள் அகற்றம்!

அங்கு வசிக்கும் பொதுமக்களும் அப்பகுதி ஆலய நிர்வாகத்தினரும் விடுத்த வேண்டுகோளின் பேரில்
வெல்லாவெளி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக மின்சாரத் தூண்கள் அகற்றும் நடவடிக்கை இன்று 19.11.226 முன்னெடுக்கப்பட்டது

அப்போது அங்குக் காணப்பட்ட பழைய மின்சார தூண்கள் அகற்றப்பட்டுப் புதிய தூண்கள் பாதுகாப்பான இடங்களில் மீண்டும் மக்களுக்கு மின்சார பாவனை வசதியினை வழங்க பாதுகாப்பான இடங்களில் அவை மீண்டும் நாட்டி வைக்கப்பட்டன

வெல்லாவெளி பகுதியில் பாதுகாப்பற்ற மின்சாரத் தூண்கள் அகற்றம்!

மின்சாரத் தூண்களை அகற்றும் பணிகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரடியாகக் களத்திற்குச் சென்று பணிகளைப் பார்வையிட்டார்.

மின்சார சபை உயர் அதிகாரிகள் போரதீவுபற்று பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் முன்னெடுக்கப்படும் இந்த வேலை திட்டத்தின் போது கலந்து கொண்டனர்.

எஸ்.வரதராஜன்