மட்டக்களப்பு போரதிவு பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கர் புரம் கிராமத்தில் தித்துவா புயலினால் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைக்க பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிராம விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன மதகுகளைப் பார்வையிடுவதற்கான கள விஜயம் ஒன்றை இன்று 22.11.2026 மேற்கொண்டு,பாதிப்பு விவரங்கள்,அதன் முக்கியத்துவம் பற்றி அங்குள்ள விவசாயிகளிடம் கேட்ிடறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து துரிதமாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை பிரதேசத்தின் அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற வகையில், இதற்குப் பொறுப்பான பிரதேச திட்டமிடல் பணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மண்டூர் கமல சேவை பிரிவுக்குக் கீழ் வரும் இந்த விவசாய கிராமத்தின் சுமார் 500 விவசாயிகள் 2 போகமும் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை செய்கையினை மேற்கொண்டு வருவதனால்,
அவர்களுக்கான நீர்ப்பாசன தேவை முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த நீர்ப்பாசன மதகுகளை விரைவாகப் புனரமைத்துக் கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்
பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கள விஜயத்தின் போது, பிரதேச சேலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுதாகரன் விவசாய- கமநல சேவை நிலையங்களில் உயர் அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் எனப் பலரும் இணைந்திருந்தனர்.
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
