அநுராதபுரம் ரம்பாவை பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

அநுராதபுரம் ரம்பாவை பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பாவை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இபோச பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பஸ் ஒன்றும் அந்த பஸ்களில் ஒன்றை மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது