கொழும்பில் 129 மி.மீ மழை பதிவு!

இடைப் பருவப்பெயர்ச்சி Inter-monsoon) தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து இன்று (6) மாலை வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் 129 மில்லிமீற்றரும், மத்துகமைவில் 95 மில்லிமீற்றரும், பதுரலியாவில் 84 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தக் கனமழை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளிலும் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இருந்து காலி வீதி வரையான பகுதிகள், பொரளை, மருதானை, ஆமர் வீதி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.