அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில்

அஸ்வெசுமை கொடுப்பனவு பெறுவதற்கான பட்டியல் மீளாய்வில், சுமார் 14 இலட்சம் பேர் தகுதியிழப்பதாக நலனபுரிச் சபை தெரிவித்துள்ளது.

எனினும்,இன்று அக்டோபர் 29 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 11 ஆம் திகதிவரை மேன்முறையீடு செய்யவோ ஆட்சேபனை தெரிவிக்கவோ முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. eservices.wbb.gov.lk என்ற இணையத்தளத்தில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யலாம்.

புதிய நடைமுறையின் கீழ், பயனாளிகள் மிகவும் வறியவர்கள்,வறியவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நலன்புரி உதவிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மிகவும் வறியவர்கள் பிரிவின் கீழ் 363,142 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாதாந்தம் 17,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.

அதேவேளை, வறியவர்கள் பிரிவின் கீழ் 628,658 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் வழங்கப்படும்.

முதலாம் கட்ட பெயர்ப் பட்டியலின் கீழ் மொத்தம் 991,800 பேர் நலன்புரி உதவிகளைப் பெறத்
தகுதி பெற்றுள்ளனர்.

புதியவர்களுக்கு நவம்பர் 27 கொடுப்பனவு

இதற்கிடையில், புதிதாகத் தகுதி பெறும் பயனாளர்களுக்கான இரண்டாவது பெயர்ப் பட்டியல் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.

முதல் பட்டியலில் தகுதிபெற்றோருக்கான கொடுப்பனவு நவம்பர் 27 ஆம் திகதி அவர்களின் அஸ்வெசுமை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்படும.

புதியவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கான கடிதங்கள் நவம்பர் 12 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்றும் சபை அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு நலன்புரி நன்மைகள் சபையினால் அஸ்வெசுமை நலன்புரித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது, நான்கு பயனாளர் பிரிவுகளின் கீழ் 18,068,407 குடும்பங்கள் தகுதி பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.