அமைச்சர் பிமல் ரட்ணாயக்க நோர்வே அமைச்சர் கம்சியுடன் சந்திப்பு

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்ணாயக்க,நோர்வே போக்குவரத்து அமைச்சர் – இலங்கையரான- கம்ஸி குணரட்ணத்தைச் சந்தித்துள்ளார்.

நோர்வே சென்றுள்ள அமைச்சர் பிமல் தலைமையிலான குழுவினர், வீதிப் பாதுகாப்பு, நிலையான போக்குவரத்து குறித்து அமைச்சர் கம்ஸியுடன் அவரது அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான அமைச்சர் கம்ஸி குணரட்ணம், விபத்துகளைத் தவிர்க்கும் வீதிப் பாதுகாப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் தன்னாலான ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்துள்ளார்.