கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பலாங்கொடை கஸ்ஸப தேரரைத் தாக்கவில்லை என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தேரர் நிலத்தில் சறுக்கி வீழ்ந்தார் என்று கறுவாத்தோட்டம் பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். பிரித் பாராயணம் ஓதிக்கொண்டிருந்தபோது பிக்கு தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும் அவ்வாறான பொய்த் தகவலைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பூங்காவில் கூடாரம் அமைக்க பிக்குகள் தயாரானபோது பொலிஸார் தலையிட்டதாகவும் அப்போது பொலிஸாரை முன்னால் தள்ளிவீழ்த்துவதற்குப் பிக்குகள் முயன்றபொது, கஸ்ஸப தேரர் கொங்கிறீட் படியில் சறுக்கி வீழ்ந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது வெளியேறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
