இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுகிறது

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையால் (ETF) அதன் உறுப்பினர்களின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்காக எதிர்காலச் சுடர் புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள 9,000 மாணவர்களுக்குத் தலா ரூபாய் 15,000 வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 31.10.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வதற்குப் பெற்றோரில் தாய் அல்லது தந்தை ETF நிதியத்தில் நடப்பு உறுப்பினராக இருக்க வேண்டும்.மாணவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அந்தந்த மாவட்டத்துக்கான வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்திருத்தல் அவசியமான அடிப்படைத் தகுதியாகும்.

இதற்கு விண்ணப்பிக்கும் போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், மாணவரின் பிறப்புச் சான்றிதழ் பிரதி, அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிப் பட்டியல், பெற்றோரின் ETF உறுப்பினர் எண்,பங்களிப்பு உறுதிப்படுத்தல் ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைப் பிரதி,அதிபரின் கையொப்பத்துடன் கூடிய உறுதிப்படுத்தல் கடிதம் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்விண்ணப்பப் படிவங்களை ETF பிரதேச அலுவலகங்கள் அல்லது பாடசாலைகள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, பாடசாலை அதிபர்,தாய் அல்லது தந்தை பணிபுரியும் நிறுவனத்தின் (முதலாளி) கையொப்பம்,முத்திரையைப் பெற்று, இறுதித் திகதியான 31.10.2026 இற்கு ETF தலைமை அலுவலகத்திற்கோ பிரதேச அலுவலகத்திற்கோ தபால் மூலமாகவோ நேரடியாகவோ அனுப்பிவைக்க முடியும்.

எஸ். ஆர். இரவீந்திரன்