முடிவின்றித் தொடரும் மகா சங்கத்தினரின் போராட்டம்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகா சங்கத்தினருடனான சமரசப் பேச்சுகள் வெற்றியளிக்கவில்லை. இதனால், தேரர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.

ஞானசார தேரரின் விடுதலை குறித்து அரசாங்கம் சாதகமான பதிலை அறிவிக்கும் வரை ஜனாதிபதி செயலகத்தைவிட்டு நகரப்போவதில்லை என்று பிக்குகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

இந்த விவகாரமாகப் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நீதிமன்ற விடயத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. ஒரு மாதமாகவது கால அவகாசம் தேவை என்று சொன்னார்.

னினும், அதனைக் கேட்பதற்கு மகா சங்கத்தினர் தயாராக இல்லை. தமக்கு இப்போதே ஒரு சாதகமான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார்கள்.