தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தை அடைந்தது!

கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும் தேரர்களின் மத உரிமைகளை வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது.

பேரணி காரணமாக அதிகளவான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நடைபேரணியில் நூற்றுக் கணக்கான தேரர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலதா மாளிகையின் வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி இன்று கொழும்பில் நிறைவடைகின்றது.