நீதிமன்ற வளாகத்தில் ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது, அவரது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஔிப்பதிவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பிரதான வாயிலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஔிப்பதிவாளர் தனது கெமராவினால் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் பலமாகத் தாக்கும் காட்சிகள், அங்கிருந்த ஏனைய செய்தியாளர்களின் கெமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதேனும் அசம்பாவிதத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட சதியா இது என்ற சந்தேகத்தையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதத்திற:கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
