கொக்குவிலில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்ச்சி

கொக்குவிலில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்ச்சி ஒழங்குசெய்யப்பட்டுள்ளது.

J/128, J/124 கிராம மட்ட அலுவலர்களின் நெறியாள்கையில் கொக்குவில் முதலி இளைஞர் கழகம் மற்றும் கொக்குவில் மத்திமேற்கு இளைஞர் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வு 01/10/2026 வியாழக்கிழமை பி.ப 2.45 மணிக்கு யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருமண மண்டபத்தில் ந தவநேசன் (கிராம சேவை அதிகாரி -J/124) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ந தயாளன் (அதிபர் – யாழ் கோண்டாவில் இந்துக்கல்லுாரி ) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு தி சந்திரகாசன் – (சமுர்த்தித் தலைமைப் பீட முகாமையாளர் பிரதேச செயலகம் நல்லூர் ) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கா சுதாகரன் (தலைவர் – கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய தர்மகர்த்தா சபை), செல்வி ச பாலாம்பிகை (ஆசிரியர்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்