டெங்கு மரணம் 77ஆக அதிகரிப்பு

இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி,

இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 99,634 ஆகும்,

அதேவேளையில் மரண விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், மொத்த நோயாளர்களில் 52.53% மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 52,340 ஆகும்.

மாவட்ட மட்டத்தில் பார்க்கும்போது, அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 21,136 ஆகும்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 19,569 நோயாளர்களும், கண்டியில் 7,547 நோயாளர்களும், களுத்துறையில் 6,339 நோயாளர்களும் மற்றும் மாத்தறையில் 6,273 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

மேலும் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இதுவரை 4,144 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

37 மருத்துவ அதிகார பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதிஅபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன்,

நுளம்புகள் பெருக்கமடையும் இடங்களை அழித்து சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.