WhatsApp Image 2026-09-13 at 09.40.48 (2)

துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய தேரோட்டம் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேரோட்டம் ,இன்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

ஆலய உற்சவமானது கடந்த 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்த உற்சவம் இடம்பெறுகிறது.

கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு, ஈசான சிவச்சாரியார் சிவசிறி சசிடேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றது.

சா. நடனசபேசன்